கோவில்பட்டியில் ஓசி சரக்கு(மதுபானம்)தர மறுத்த பார் ஊழியரை வெட்டி கொலை செய்த திமுக நிர்வாகி? தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடை அருகே கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் பார் நடத்தி வருகிறார். இந்த பாரில் கோவில்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த குருசாமி(60) என்ற முதியவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அங்கு வாடிக்கையாக கயத்தார் சிதம்பரம் பட்டி பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் என்ற மூக்கையாபாண்டியன் என்பவர் வாடிக்கையாக மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்று வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் வழக்கம் போல் 08-05-2025 புதன்கிழமை மதியம் 2 மணி அளவில் பாருக்கு வந்த சங்கரபாண்டியன் என்ற மூக்கையாபாண்டியன் வழக்கம் போல் ஓசியில் மதுபானம் கேட்டுள்ளார், இதற்கு முதியவர் குருசாமி பணம் கொடுத்தால் தான் சரக்கு தருவேன் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சங்கரபாண்டியன் என்ற மூக்கையாபாண்டியன் முதியவர் குருசாமியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார், இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அப்போது சங்கரபாண்டியன் என்ற மூக்கையாபாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த அறிவாலை எடுத்து முதியவர் குருசாமியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சங்கரபாண்டியன் என்ற மூக்கையாபாண்டியன் குருசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சங்கரபாண்டியன் என்ற மூக்கையாபாண்டியனை தேடி வருகின்றனர். கொலை செய்த சங்கரபாண்டியன் என்ற மூக்கையாபாண்டியன் திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும், தற்போது கட்சியின் உறுப்பினராக இருப்பதாகவும் கூறப்படுகிறது...
Kovilpatti
ஓசி சரக்கு தர மறுத்த பார் ஊழியரை வெட்டி கொலை செய்த திமுக நிர்வாகி?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
1 கோடி மரங்கள் என்னோட கனவு திட்டம் - மரங்கள் மக்கள் இயக்க நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நெகிழ்ச்சி!
அடுத்த
பாம்பு கடித்து பெண் உயிர்யிழப்பு?
இதையும் படிக்கலாம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு - கைது செய்து விடுவித்த போலீசார்!
02 Oct 2026
காரில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது!
02 Oct 2026
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026