கோவில்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்புடன்  ரூபாய் 1000 வழங்க வலியுறுத்தி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்!




தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன்  ரூபாய் 1000 வழங்க வேண்டும்,  சமீபத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு  உரிய நிவாரணம் தொகை வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க கோரியும்,  தமிழக அரசை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு தூத்துக்குடி வடக்குமாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தேமுதிகவினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். 



நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன் மாவட்டதுணைசெயலாளர் மாரிச்செல்வம் , ராஜபாண்டி பொதுகுழுஉறுப்பினர் முருகன் , கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன்,  ஒன்றியசெயலாளர் விளாத்திகுளம் தங்கச்சாமி ,மாரியப்பன் ,கோட்டைச்சாமி கோவில்பட்டி பொன்ராஜ் ,புதூர் மணிகண்டன், ஆறுமுகபெருமாள், கயத்தார் நடராஜன் ,கண்ணண் ,மாவட்ட மகளிரணிசெயலாளர் வெண்ணிலா, சந்தனமாரி ,மாவட்ட கேப்டன் மன்ற துணைசெயலாளர்கள் மேகலிங்கம் குவாளிஷ்ராஜ் பிச்சைமணி, மாவட்டதொழிற் சங்க துணைதலைவர் முருகன் ,கருப்பசாமி ஒன்றிய துணைசெயலாளர் சென்னையம்பட்டி  நாராயணன்,  மகேந்திரன், நகர நிர்வாகிகள் மதிமுத்து பொன்பாண்டி பிரசன்னா கணேசமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.