கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் அரசு பஸ்கள்  நின்று செல்லக்கோரி, கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்!


கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 4 வது வார்டு சங்கரலிங்கபுரம் பகுதியில் அரசு பஸ்கள்  நின்று செல்ல வலியுறுத்தி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜூன் 6ஆம் தேதி அப்பகுதி மக்கள் சார்பில் சாலை மறியல் செய்யப்போவாதாக கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் நகர காங்கிரஸ் தலைவர் K. T. P அருண்பாண்டியன், மாவட்ட பொது செயலாளர் S சண்முகராஜ், மாவட்டசெயலாளர் துரை ராஜ், மாவட்ட சமூக ஊடகபிரிவு தலைவர் A. ராஜா சேகரன், 3வது வார்டு காங்கிரஸ் தலைவர் முருகேசன் INTUC மாவட்ட பொதுச்செயலாளர் R. ராஜா சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.