கோவில்பட்டியில் சாலை அமைக்கும் பணியினை  நகர மன்ற உறுப்பினர்  MRV கவியரசன் ஆய்வு செய்தார்!



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 32வது வார்டு பாரதிநகர் 4வது மேட்டுத் தெருவில் உள்ள பின் குறுக்கு தெரு போஸ்நகரில் மழைநீர் தேங்கி மக்கள் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளதால் சாலை வசதி வேண்டி நகராட்சி நிர்வாகத்திடம் நீண்ட நாட்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று   தற்போது தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, அதனை அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன் ஆய்வு செய்து  பார்வையிட்டார்.