கோவில்பட்டிக்கு முதல்வர் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து - நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட நகர திமுக கட்சி அலுவலகம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலையை வரும் 28ந்தேதி மாலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். 


பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். இதையடுத்து மறுநாள் (29ந்தேதி) காலை தென்காசி மாவட்டத்தின் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறார்.


இந்நிலையில் முதல்வர் வருகையை ஒட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், முதல்வர் வரும் வழிகள் குறித்து நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி  நேற்று ஆய்வு மேற்கொண்டார். 


புதிதாக திறக்கப்பட உள்ள திமுக கட்சி அலுவலகம், முதல்வர் வரும் வழிகள் மற்றும் முதல்வர் தங்க உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல், தென்காசி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வழிகள்  ஆகியவற்றில் டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின்போது ஏடிஎஸ்பி திபு மற்றும் கோவில்பட்டி டி‌.எஸ்.பி. ஜெகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.