கோவில்பட்டி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாய உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தை சேர்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44), விவசாயியான இவர் கோவில்பட்டியில் இருந்து விவசாய தோட்டத்திற்கு டிராக்டர் வாகனத்தில் உரம் ஏற்றி வந்து கொண்டிருந்தபோது, கோவில்பட்டி குருமலை சாலை அருகே டிராக்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த சௌந்தரராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.