கோவில்பட்டி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கவிழ்ந்து விபத்துக்கான  பெட்ரோல் டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி!






தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டியைச் சேர்ந்த சின்ன சந்தானம் என்பதற்கு சொந்தமான டேங்கர் லாரியை வடக்கு கைலாசபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் ஒட்டி வருகிறார். நேற்று ஆறுமுகச்சாமி சென்னையில் டேங்கர் லாரியில் பெட்ரோல் டீசல் நிரப்பி கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலைக்கு இன்று அதிகாலை வந்துள்ளார். அங்குள்ள தனியார் பெட்ரோல் பல்கில்  பெட்ரோல் டீசல் இறக்கிவிட்டு,  பசுவந்தனையில் பெட்ரோல் பல்க்கில் பெட்ரோல் டீசல் நிரப்ப சென்றுள்ளார். லாரி கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை பகுதியில் வந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையிலிருந்து விலகி, சாலையின் ஓரத்தில் இருந்த நடைமேடையை உடைத்து மரத்தில் மோதி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மரத்தில் மோதியதால் குடியிருப்பு பகுதிக்கு முன்பாக மின்கம்பம் முன்பு கவிழ்ந்து நின்றது. டேங்கர் லாரி டிரைவர் ஆறுமுகசாமி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தரப்பினார். இது குறித்து அருகில் இருந்த குடியிருப்பு பகுதி மக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பெட்ரோல் டீசல் வெளியேறாமல் இருக்கும் வகையில் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து இரண்டு கிரேன்களை கொண்டு தீயணைப்பு துறையினர் உதவியுடன் விபத்துக்குள்ளான டேங்கர் லாரி மீட்கப்பட்டது. மீட்கும்போது பெட்ரோல் டீசல் வெளியேறியதால் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்புத் துறையினர் இரண்டு  தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தண்ணீர் மற்றும்  நுரையை தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் விபத்துக்குள்ளான டேங்கர் லாரி மீட்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் துக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.  விபத்து நடந்த பகுதியில் மரங்கள் மற்றும் மின்கம்பம் இருந்ததால் டேங்கர் லாரி குடியிருப்புகளுக்கு போகமால் தடுக்கப்பட்டது. இல்லையென்றால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.