கோவில்பட்டி அருகே உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்த விவசாயிக்கு அரிவாள் வெட்டு :அத்தையுடன் இருந்த பழக்கத்தை விட மறுத்ததால் விவசாயியை வெட்டிய மருமகன் - கோவில்பட்டி அருகே பரபரப்பு.





தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து அம்மன் கோவில் தெருவை சார்ந்த தங்கப்பாண்டி மகன் முத்துப்பாண்டி (56) விவசாயியான இவருக்கு பூலம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் அதே பகுதியில் வசித்து வரும் முத்தம்மாள் (47)  என்பவருக்கும் முத்துப்பாண்டிகும் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்து வந்த நிலையில் முத்தம்மாள் அண்ணன் மகன் கொம்பையா (25)  முத்துப்பாண்டியை பலமுறை கண்டித்ததாகவும் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இன்று கயத்தாறு அருகே உள்ள மானங்காதானில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்துவிட்டு தனது ஊரான அய்யனார்ஊத்துபட்டிக்கு  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அப்போது அய்யனர்ஊத்து  திருவள்ளுவர் காலனி அருகே முத்துப்பாண்டி வந்தபோது மறைந்திருந்த கொம்பையா கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துப்பாண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் முத்துப்பாண்டிக்கு தலை கை கழுத்து கண்ணம் போன்ற இடங்களில் அரிவாள் வெட்டுக்கள் விழுந்துள்ளது அக்கம் பக்கத்தினர் கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல்  கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து  முத்துப்பாண்டியை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் வெட்டிவிட்டு தப்பியோடிய கொம்பையா மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்