கான பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார்!

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில்,Am Sorry iyyappa என்று சர்ச்சைக்குரிய வகையில் இசைவாணி பாடல் பாடி தற்பொழுது ட்ரெண்டாகி வருவதாகவும் இந்த பாடல் கோடிக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் மனதை புண்படுத்துகிறது. இசைவாணி கிறிஸ்தவர் என்பதால் ஐயப்பனை இழிவுபடுத்தி பாட்டு பாடியதாகவும் பெண்கள் ஏன் கோவிலுக்கு வரக்கூடாது என என்று கிண்டலாக பாடி உள்ளார். இது இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்நிலையில் கான பாடகி இசைவாணி மற்றும் இந்துக்கள் பற்றி தவறாக திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் பேசி வருவதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு ஐயப்ப பக்தர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்தனர்.