தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்த பெருமாள் சாமி இவர் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறார்இவரது மனைவி சுந்தரி (40) இவர் தனது 2 குழந்தைகளுடன் வில்லிசேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் சுந்தரி குழந்தைகளுடன் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பீரோவை உடைத்து சுமார் 65 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,5 லட்சம் பணம் திருட்டுப் போனதை கண்டு சுந்தரி அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த சுந்தரி வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் கைத்தார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் தனிப்படையில் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.