கோவில்பட்டியில் 55 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகர் மேட்டு தெருவில் உள்ள சின்னமாரி என்பவரின் வீட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 ரேஷன் அரிசி மூட்டைகளை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கேரளாவுக்கு மூடைகளை கடத்த இருந்ததாக கூறப்படுகிறது.