தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி திருநெல்வேலி சாலை தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே மீன் கடை நடத்தி வந்துள்ளார், இரவில்வெள்ளத்துரை மீன்கடையில் தூங்குவது வழக்கமாக வைத்துள்ளார், வெள்ளத்துரைக்கு துணையாக கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் பகுதியை சேர்ந்த சாமி என்ற மகாராஜன் (56) என்பவர் இரவில் அவருடன் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இருவரும் வழக்கம்போல் 06-06-2024 வியாழக்கிழமை இரவு மீன் கடையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் சாமி என்ற மகாராஜன் ஆகிய இருவரையும் கொடூரமாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார்,இரு உடல்களையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை நேரில்சென்று பார்வையிட்டார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் மோப்பநாய் ஓடியது, ஆனால் அதில் எந்த ஒரு தடயங்களும் முன்னெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது, மற்றும் தடையவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து மீன் வியாபாரி உட்பட 2 பேரை கொலை செய்த மர்ம கும்ப கும்பலை தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் மீன் வியாபாரி வெள்ளத்துரையை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினருடன் ஆய்வாளர் சுகா தேவி நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினர் போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வெள்ளைத்துரைக்கும் அவரது கடை அருகே இறைச்சி கடை நடத்தி வரும் இனாம் மணியாச்சியை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்திக் (32) என்பவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது. இதன் காரணமாக கார்த்திக், தனது நண்பர்களான கோவில்பட்டி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த காளியப்பன் மகன் சேர்மக்கனி (32), மந்தித்தோப்பு ஊராட்சியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிராஜ் (31) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.