கோவில்பட்டியில் பட்டப் பகலில் 18 பவுன் தங்க நகை திருட்டு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதி சேர்ந்த ருக்மணி இவர் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்று வருகிறார், இந்நிலையில் தனது உறவினரை பார்க்க எட்டையாபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க நகை பட்டப் பகலில் திருடு போனது கண்டு ருக்மணி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.