இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேல கொடுமலூர் கிராம ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக 2 ஆண்டு காலத்தில் மேல கொடுமலூர், செய்யாமங்கலம், கோணாரியேந்தல், உள்ளிட்ட கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கொரோனா காலத்தில் அந்தந்த ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்களின் உயிரை பாதுகாத்திடும் வகையில் இரவு பகலாக தங்களது உயிரை பணையம் வைத்து தூய்மைப் பணியாற்றிய முன்களப்பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகம் கிராம மக்களின் சார்பில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மதம் மற்றும் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து முன்கள பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம், கிராம மக்கள் சார்பில் குலவையிட்டு, மாலை அணிவித்து அவர்கள் மீது மலர்கள் தூவி ஊர்வலமாக அழைத்துச் வந்து புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறக்கும் வகையில் ரிப்பன் வெட்டி திறக்கப் செய்து தூய்மைப்பணியாளர்களை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Kamuthi
தூய்மைப் பணியாளர்களால் திறந்து வைக்கப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளது!
அடுத்த
கண்மாயை சீரமைக்கும் பணியை MLA மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!