கமுதி அருகே உடலில் கத்தியால் கீரலிட்டு வினோத வழிபாடு!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நீராவி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கரக மகாஉற்சவ விழாவை முன்னிட்டு, ஆண்கள் தங்களின் உடலில் சந்தனம் பூசி கத்தியால் உடலை கீரலிட்டு உடலை வருத்தி ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மனை ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் கத்தி போடும் வினோத வழிபாட்டில் 200க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று, நீராவி கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வளாகமாக சென்று வழிபாடு நடத்தினர். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் இந்த திருவிழாவானது கடந்த 19ஆம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கரகத்துடன் கத்தியால் தங்களின் உடலில் கீரலிட்டு சாமியை அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியை காண நீராவி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.