கமுதி அருகே வடமாடு எருதுகட்டு விழாவில் ஆர்வமுடன் காளைகளை அடக்கிய வீரர்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன்கோவில் ஆடி மாத பொங்கல் திருவிழாவை வடமாடு எருதுகட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது, இந்த வடமாடு எருதுகட்டு விழாவில் ராமநாதபுரம்,மதுரை,சிவகங்கை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டன, மைதானத்தின் நடுவே கயிறு கட்டப்பட்டிருந்த காளையை ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் காளையை அடக்கி பிடித்து அசத்தினர், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு அண்டா பரிசு கோப்பை ரொக்கப் பணமாகியவை பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் கமுதி சொற்றோட்டாத பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் நடைபெற்ற இந்த எருதுகட்டு விழாவை கண்டு ரசித்தனர்.