கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா  ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பசும்பொன்னில் ஆய்வு!


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது.இங்கு வரும் அக்டோபர் 30 ஆம் தேதி 117_வது ஜெயந்தி விழா மற்றும் 62_வது குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது,ஏராளமானவர்கள் கலந்து கொள்ளும் இந்த விழா ஏற்பாடுகள் குறித்தும்,அக்டோபார் 30_ம் தேதி அரசு விழா நடைபெற  இருப்பதால் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த வருவதால் அதன்  ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித்சிங் தலைமையில் இன்று வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட அனைத்து  துறை அதிகாரிகளுடன்  பசும்பொன்னில் விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.