இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் காவிய ஜனனி என்பவர் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 499/500 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். இந்த மாணவியை கௌரவிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆட்சியாளர்கள், பொதுமக்கள் என பலரும் சமூக ஆர்வலராக நேரில் சென்று நிதி உதவிகளையும்  பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்வு மதிப்பெண்ணில் காவியம் படைத்த காவிய ஜனனியை எல்‌.ஐ.சி ஆப் இந்தியா : மதுரை கோட்டம் சார்பில் காவிய ஜனனி கிராமத்தில் மதுரை முதுநிலை கோட்ட மேலாளர் நாராயணன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கோல்டன் ஜூப்ளி பண்ட் மூலமாக காவிய ஜனனி கல்லூரி படிப்புக்காலம்  வரை கல்விச் செலவினத்திற்கான தொகை முழுமையாக ஏற்பதற்கான ஆவணங்களை பரிந்துரைப்பதாக LIC அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிகழ்ச்சியில் வணிக மேலாளர், விற்பனை மேலாளர், கிளை மேலாளர்கள், மதுரை கோட்ட தலைமை நிர்வாகிகள், எல்ஐசி முகவர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டார் பங்கேற்றனர்.