கமுதி அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி:  வேப்ப மரத்தடி நீதியரசர்  காட்டு விநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி விழா பால்குடம் ஊர்வலம் பாலாபிஷேகம்!


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேடு வேப்ப மரத்தடி நீதியரசர் காட்டு விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலம் விநாயகருக்கு அபிஷேக அலங்காரம் தீபாரணை நடைபெற்றது,முன்னதாக கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து உற்சவர் விநாயகரை  கோயில் பூசாரி சுந்தர் என்ற சுந்தர ரேஸ்வரர் கேரளா செண்டை மேளம் இசை வாத்தியங்களுடன்  படைசூல 108 பால்குடங்களை  மதுரை சாலையின் வழியாக தாலுகா அலுவலகம்ஒன்றிய அலுவலகம் முதுகுளத்தூர் சாலையின் வழியாக நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள.வேப்ப மரத்தடி நீதியரசர் காட்டு விநாயகர் மூலவர் சுவாமிக்கு பொறி அவள் கொழுக்கட்டை சுவாமிக்கு படையல் இட்டு  தீபாதாரணை நடைபெற்றது.


இதில் கமுதி சுற்று வட்டார கிராம பொதுமக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கோவிலுக்கு வந்த அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.