தமிழகத்தில் முதல்முறையாக 61 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய வட்டாட்சியர்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியராக கடந்த ஓராண்டு செம்மையாக வட்டாட்சியர் பணி செய்து வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சேதுராமன், கமுதி தாலுகாக்குட்பட்ட பகுதிகளில் வீட்டுமனை பட்டா இல்லாத சுமார் 61 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, தனது  தீவிர முயற்சி எடுத்து, தமிழகத்திலேயே முதல்முறையாக 61 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளின் பல ஆண்டு வாழ்நாள் கனவை நிறைவேற்றி, ஒவ்வொருவருக்கும் தலா 2 சென்ட் வீதம்  இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

இந்நிலையில் பணி மாறுதல் காரணமாக தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் பரமக்குடி தாலுகாவிற்கு, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியிடம் மாறுதல் பெற்று செல்லும் நிலையில், கமுதி தாலுகா உட்பட்ட  ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளும் ஒன்றிணைந்து, வட்டாட்சியர் சேதுராமனை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்தி கௌரவித்தனர்.

ஆனால் வட்டாட்சியர் சேதுராமன் பணியிடம் மாறி செல்வது கமுதி வட்டார பகுதி மக்களுக்கு பெரும் வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது, மீண்டும் வட்டாட்சியர் சேதுராமன் கமுதி வட்டாட்சியராக வரவேண்டும் என்று கமுதி சுற்றுவட்டார பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.