கமுதி அருகே ஆடி கிருத்திகையை முன்னிட்டு குமரக்கடவுளுக்கு பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மேலக்கொடுமலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குமரக்கடவுள் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு, பரமக்குடி மாதாந்திர பாதயாத்திரை குழுசார்பில் பரமக்குடியில் இருந்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் பால்குடம், வேல்காவடி, பறவை காவடியுடன் சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
முன்னதாக ஆடி கிருத்திகையை முன்னிட்டு குமரக்கடவுள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது இதில் பரமக்குடி கமுதி முதுகுளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து சென்ற அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.