மேலகடலாடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாதாள காளியம்மன் சித்திரை களரி உற்சவ விழாவை முன்னிட்டு 1001 உருவ சிலைகள் செலுத்திய பக்தர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் மேல கடலாடி அருள்மிகு ஸ்ரீ பாதாள காளியம்மன் வருடாந்திர சித்திரை கலரி உற்சவ விழா கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மேல கடலாடி, மற்றும் கடலாடி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட 1001 பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக கருப்பசாமி, அய்யனார், பேச்சியம்மன், காளியம்மன், தவலும் பிள்ளை, பசுமாடு, நாய், நாகப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு உருவ சிலைகளை வடிவமைத்து, சிலைகளுக்கு வண்ணம் தீட்டி, மாலை அணிவித்து நடனக்குதிரையாட்டம், மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் உருவ சிலைகளை தலையில் சுமந்தவாறு, வானவேடிக்கையுடன் பூதங்குடி கிராமத்தில் இருந்து  கடலாடி மேல கடலாடி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வளம் வந்து  மேலக்கடலாடி ஸ்ரீ பாதாள காளியம்மன் கோவிலுக்கு சென்று ஆலயத்தை சுற்றி 3 முறை வளம் வந்து பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர், இந்த களரி உற்சவ விழாவில் கடலாடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.