கடலாடி அருகே கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம்!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் தெற்கு கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெயமங்கள விநாயகர், ஸ்ரீ பர்மா பீலிக்கான் முனீஸ்வரர், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஒட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக ரொக்க பணம் நினைவு பரிசு குத்துவிளக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது, பந்தயத்தை சாலையின் இருபுறமும் பார்வையாளர்கள் கண்டு ரசித்து சென்றனர்.