ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தனியங்கோட்டம் கிராமத்தில் வன பேச்சி அம்மன், கொண்டன அய்யனார் கோவில் 14ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, பூஞ்சிட்டு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 37 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியானது சாயல்குடி TO முதுகுளத்தூர் சாலையில் நடைபெற்றது, சீறிப்பாய்ந்த காளைகளை சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கண்டு ரசித்தனர், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.