பம்மனேந்தல் கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்தில் ஸ்ரீ குருநாதசாமி திருக்கோவில் 48வது குருபூஜை விழா, மற்றும் ஸ்ரீ பெரிய நாச்சியம்மன், சித்தி விநாயகர் சித்திரை கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, போட்டியானது பூஞ்சிட்டு, தேஞ்சிட்டு, சிறிய மாடு, பெரிய மாடு என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி,விருதுநகர்,மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியானது பம்மனேந்தல் முதல் கீழ்க்குடி வரை நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டிவந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை சாலையில் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அதிவேகத்தில் சென்ற சில மாடுகள் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.