கமுதி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு 508 திருவிளக்கு பூஜை மற்றும் பொன்னூஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் வருடாந்திர வைகாசி பொங்கல் விழா கடந்த 14ஆம் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் விமர்சியாக தொடங்கியது, 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாதாரணை நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7ஆம் நாளாக அம்மனுக்கு 508 திருவிளக்கு பூஜை, கூட்டு மந்திர வழிபாடு பிரார்த்தனை, பொன்னூஞ்சல் தாலாட்டு வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கமுதி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.