கிருத்திகை வருடாபிஷேக விழாவை முன்னிட்டு  குமரக்கடவுளுக்கு  108 சங்க அபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மேலக்கொடுமலூர் குமாரகடவுள்  ஆலயத்தில் சித்திரை மாத கிருத்திகை வருடாபிஷேக விழாவை முன்னிட்டு குமரக்கடவுளுக்கு, கமுதி அருகே உள்ள அபிராமம் பாதயாத்திரை குழு சார்பில் 108 சங்காபிஷேகம் மற்றும் பால், தயிர், சந்தனம்,இளநீர், பன்னிர்,விபூதி, பஞ்சாமிர்தம்,தேன், பச்சரிசி மாவு, கரும்புச்சாறு உள்ளிட்ட 33 வகையான மூலிகை திரவிய அபிஷேகங்கள் மற்றும் கும்பநீர் அபிஷேகம் மற்றும் பஞ்சமுக அலங்கார தீபாதாரணை நடைபெற்றது. இதற்கு முன்னதாக அபிராமம் கிராம பாதயாத்திரை குழு சார்பில் கைலாய இசை வாத்தியங்களுடன் மின்னொளி அலங்கார தேரில்  குமாரக்கடவுள் காட்சியளித்தார், இதில் ஏராளமான பக்தர்கள், அழகுகுத்தியும், மயில்காவடி எடுத்தும் , 108 பால்குடங்கள் எடுத்தும் பாதயாத்திரையாக மேலகொடுமலூர் குமரக்கடவுள் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்தனர். இந்த கிருத்திகை வருடாபிஷேக விழாவில் முன்னிட்டு கமுதி சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.