கமுதி அருகே இருளப்பசுவாமிக்கு 1008 கிலோ ஆட்டுக்கறி படையல்!- பக்தர்களுக்கு சுடச்சுட அசைவ விருந்து! ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள இடிச்சியூரணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லவ கணபதி இருளப்பசாமி, பாதாளபேச்சி அம்மன், மாரியம்மன் கோவில் ஆலய வருடாந்திர வைகாசி பொங்கல் உச்சவ விழாவை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம் மற்றும் அக்கினி சட்டி, பூஜை பெட்டியை வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து இடிச்சியூரணி முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். பின்னர் எடுத்துவரப்பட்ட 108 பால் குடங்களால் இருளப்பசாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீவாதாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இருளப்பசாமி மற்றும் பாதாள பேச்சியம்மனுக்கு நேர்த்திக்கடனாக நேர்ந்து விடப்பட்ட, 51 ஆட்டுக்கடாய்களை நள்ளிரவில் இருளப்பசாமி,பாதாளபேச்சி அம்மனுக்கு பலியிட்டு 1008 கிலோ ஆட்டுக்கறி சுடச்சுட சமைத்து படையிலிடப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கிய அசைவ உணவு விருந்தில் கமுதி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பங்கேற்று அசைவ உணவை ருசித்து சாப்பிட்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்...
Kamuthi
இருளப்பசுவாமிக்கு 1008 கிலோ ஆட்டுக்கறி படையல்!- பக்தர்களுக்கு சுடச்சுட அசைவ விருந்து!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அசைவ விருந்து வழங்கி அசத்திய இஸ்லாமியர்கள் - ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு!
அடுத்த
மின்விளக்கு எரியாததால் பயணிகள் சிரமம்!