இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவிற்கு அனுப்பப்பட்ட சந்திராயன் -3 விண்கலத்தின் லேண்டர்கலன் கடந்த 23-ம் தேதி மாலை சரியாக 6.04 மணியளவில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி உலக அரங்கில் வியத்தகு சாதனை படைத்துள்ளது. இதனை ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவரும் பெருமையாக கொண்டாடி வருகின்றனர்.இதே போன்று இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் புதூர் கிழக்கு மண்டல் பொதுச்செயலாளர் பழனி முருகன் தலைமையில், அப்பகுதியில் உள்ள பள்ளிக்குச் சென்று சந்திராயன் - 3 வெற்றியை மாவட்ட செய்தி தொடர்பாளர் ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்களுடன் இனிப்பு கொண்டாடி மகிழ்ந்தனர்.இதைத்தொடர்ந்து நாகலாபுரத்தில் உள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள முதியவர்களுடன் சந்திராயன் - 3 வெற்றிக்கொண்டாட்டத்தை கேக் வெட்டி கொண்டாடி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் சீனிவாசன், வேலவன், சென்றாய பெருமாள், மற்றும் முதியோர் இல்ல பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.