தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் அஸ்வின் குமார் (7). அஸ்வின் குமார்  10-01-2023 புதன்கிழமை காலை 9 மணி அளவில்  வீட்டின் முன்பு மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றிய சூரங்குடி காவல் நிலைய போலீசார், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வேம்பார் கிராமத்தை சேர்ந்த அந்தோணி ராபர்ட் கென்னடி என்பவரின் மகன் தாமஸ் (19) என்பவரை சந்தேகத்தின் பேரில்  பிடித்து விசாரணை மேற்கொண்டதில். தாமஸ் கஞ்சா போதையில் வீட்டிற்குள் தனியாக இருந்த 7 வயது சிறுவனை தாமஸ் பாலியல் வண்புணர்வு செய்ய முயன்றுள்ளான், அப்போது சிறுவன் வீட்டில் கத்தி அலறியுள்ளான், இதனால் ஆத்திரம் அடைந்த தாமஸ் தான் வைத்திருந்த சிறிய ரக இரண்டு கக்திகளால் சிறுவன் அஸ்வின் குமாரை  கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும்  தாமஸை சூரங்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாமஸ் மீன் பிடி தொழில் செய்து வந்ததாகவும்  எப்போதும் கஞ்சா மற்றும் மது போதையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் 7 வயது சிறுவன் அஸ்வின் குமாரின் பிரேத பரிசோதனை தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. உடற்கூறாய்வு முடிந்த பிறகு சிறுவன் கொலை செய்யப்பட்ட பின்னணி முழுமையாக தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.