தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்த காவியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது (15). சிறுமி காவியா அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருப்பதைக் கண்டு அவரது பெற்றோர் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த காவியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார், சிறுமி காவியாவின் உடலை மீட்டு  உடற்கூறு ஆய்வுக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.